போதைப்பொருள் நடவடிக்கை: 12 பேர் கைது – S$152,000க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

CNB arrests 12 seizes drugs
(Photo: CNB)

போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் அதிரடி சோதனை நடவடிக்கையில் S$152,000க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலவச சர்ஜிக்கல் மற்றும் N95 முகக்கவச விநியோகம் எப்போது?

இதில் 624 கிராம் ஐஸ் போதைப்பொருள், 2,375 கிராம் கஞ்சா, 53 கிராம் கெட்டமைன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஆகஸ்ட் 3 அன்று மாலை, செரங்கூன் சாலை பகுதியில் 21 வயதான ஆடவர் ஒருவரை CNB அதிகாரிகள் கைது செய்தனர்.

பிராடெல் ஹில் பகுதியைச் சுற்றி 29 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டார், 5 பேர் பூன் டெக் சாலை அருகில் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வாம்போவா, பெடோக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் ‘கடல் சிக்கன்’ என்னும் பலூன் மீன்!