சிங்கப்பூரில் இந்த ஆண்டு தீமிதித் திருவிழா பங்கேற்பு குறித்து இந்து அறக்கட்டளை வாரியத்தின் விளக்கம்..!

Firewalking Festival 2023 Participation

இந்த ஆண்டு சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா நிகழ்ச்சி பூக்குழியில் இறங்க அனுமதிக்கப்படுவோர் குறித்த விவரங்களை இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) தெரிவித்துள்ளது.

மேலும் இதில் பொய்யான தகவல் பரவுதாக வாரியம் குறிப்பிட்டுள்ளது, அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், தொண்டூழியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மட்டுமே தீமிதித் திருவிழாவில் பங்ககேற்கமுடியும் என்பது பொய்யான தகவல் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : நோய்த்தொற்றுகளின் இரண்டாம் கட்டத்திற்கு சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும்..!

பூக்குழியில் இறங்குவர் குறித்த விவரம்:
  • பூசாரிகள்
  • தலைமைப் பண்டாரம்
  • மற்ற பண்டாரங்கள்
  • தீமிதிச் சடங்குகளில் நேரடியாக ஈடுபடும் தொண்டூழியர்கள்
  • மகாபாரதக் காட்சிப் படைப்புகளில் பங்கெடுப்போர்

மேலே குறிப்பிட்டுள்ளோர் மட்டுமே பூக்குழியில் இறங்குவர் என்று HEB முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டது.

Clarification from Hindu Endowments Board on Firewalking Festival 2020 Participation

Posted by Hindu Endowments Board on Friday, July 17, 2020

தனிப்பட்ட நேர்த்திக் கடனைச் செலுத்த மாட்டார்கள் என்றும், அவர்கள் சமயச் சடங்கை நிறைவேற்றுவதற்காகவே பூக்குழியில் இறங்குவார்கள் என்றும் HEB தெரிவித்துள்ளது.

இந்தமுறை தீமிதித் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க முடியாது என்றும், தனிப்பட்ட நேர்த்திக் கடனை செலுத்த முடியாது என்றும் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 : இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த இரண்டு குழந்தைகள் நோய்த்தொற்றால் பாதிப்பு..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg