நோய்த்தொற்றுகளின் இரண்டாம் கட்டத்திற்கு சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும்..!

COVID-19: Singapore must be prepared for second wave of infections

COVID-19 நோய்த்தொற்றுகளின் இரண்டாம் கட்டத்திற்கு சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

மேலும், அதைத் தவிர்ப்பதற்கு, அனைவரும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் கன் கிம் யோங் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கொடிக்கு தீ வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்..!

அமைச்சக பணிக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திரு கான்; தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் போன்ற இடங்களில் COVID-19 சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதை மேற்கோள் காட்டினார்.

இதில் மத நிகழ்வுகள், உணவகங்கள் மற்றும் பள்ளிகளில் பெரிய நோய்பரவல் உருவாகின்றன என்பதையும் அவர் மேற்கோள்காட்டினார்.

தனிநபர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வெளியே சென்றதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததும் அல்லது வேலையிட பாதுகாப்பு மேலாண்மை குறைபாடுகள் காரணமாக இந்த புதிய நோய்பரவல் எழுந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம் இரண்டாவது நோய்ப்பரவலுக்கு தயாராக இருக்க வேண்டும், அதைத் தவிர்ப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று திரு கான் கூறினார்.

மேலும் மற்ற நாடுகளின் சூழ்நிலையிலிருந்து நமக்கு பயனுள்ள படிப்பினைகள் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க : COVID-19 : இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த இரண்டு குழந்தைகள் நோய்த்தொற்றால் பாதிப்பு..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg