சிங்கப்பூர் கொடிக்கு தீ வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்..!

Man admits setting fire to Singapore flag
Man admits setting fire to Singapore flag (Photo: Reuters)

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு தேசிய தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், மதுபோதையில் இருந்த ஒருவர், தனது வீட்டிற்கு வெளியே தொங்கவிடப்பட்ட சிங்கப்பூர் கொடிக்கு தீ வைத்தார்.

தீயால் எரிந்த கொடியின் பகுதிகள் கீழே விழுந்ததில், கீழ் தளங்களில் கட்டப்பட்டிருந்த மேலும் 7 கொடிகளில் தீப்பற்றியது.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்குள் சோதனை செய்யப்படும்..!

இதில் 26 வயதான எல்சன் ஓங் யோங் லியாங், சொத்துக்கு சேதம் விளைவிக்கும் நோக்கில் தீ ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் போதையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ஆகஸ்ட் 4, 2019 அன்று காலை 6 மணி முதல் காலை 6.15 மணி வரை உட்லண்ட்ஸ் கிரசெண்ட்டில் உள்ள
வீட்டில் இருந்துள்ளார்.

வீட்டில் வெளிப்புற சுவர்களில் தொங்கவிடப்பட்ட கொடியைக் கவனித்த அவர், சிகரெட்டைக் கொண்டு கொடிக்குத் தீ வைத்துள்ளார்.

சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கில் தீ விபத்து ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓங் ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg