தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்குள் சோதனை செய்யப்படும்..!

migrant workers tamils-welfare-board helping
(Photo: Today)

சிங்கப்பூர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்குள் சோதனை செய்யப்படும் என்று COVID-19 அமைச்சக பணிக்குழு (ஜூலை 17) தெரிவித்துள்ளது.

அதாவது, ஆகஸ்ட் நடுப்பகுதியில் இந்த சோதனையை முடிக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும், அதைவிட முன்னதாகவே முடிக்கப்படக்கூடும் என்றும் பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் காலி இடங்கள் அதிகரிப்பு – வாடகை பெரிய அளவில் குறையும்..!

வியாழக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் உள்ள தங்கும் விடுதிகளில் வசிக்கும் 300,000 வெளிநாட்டுத் ஊழியர்களில் சுமார் 232,000 பேர் குணமடைந்துள்ளனர் அல்லது தொற்று பாதிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் முழுவதும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கத் தொடங்கிய நான்கு மாதங்களுக்குப் பிறகு இது வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஊழியர்களையும் சோதனை செய்ய அரசாங்கத்திற்கு ஏன் இவ்வளவு காலம் தேவைப்படுகிறது என்ற கேள்விக்கு, தங்கும் விடுதிகளை கிருமிநீக்கம் செய்வது ஒரு மிகப் பெரிய வேலை என்று ​​திரு வோங் கூறினார்.

இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட மீதமுள்ள ஊழியர்கள் தங்கள் இறுதி சோதனை முடிவுக்காக பெரும்பாலும் காத்திருக்கிறார்கள் என்று திரு வோங் கூறினார்

இதையும் படிங்க : சிங்கப்பூரில் போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg