சிங்கப்பூரில் காலி இடங்கள் அதிகரிப்பு – வாடகை பெரிய அளவில் குறையும்..!

Increase in vacancies in Singapore - Rents will fall sharply
(Photo: Facebook/Chatuchaksingapore)

சிங்கப்பூரில் இந்த வருடத்தின் 2வது பாதியில், சில்லறை வணிக கடைகளுக்கான வாடகை அதிக அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 தொற்று ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடைத்தொகுதிகளில் காலியான கடைகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று சொத்துத் துறை ஆலோசனை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது என்று தமிழ் முரசு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது..!

நடப்பில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இரண்டாம் கட்டம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான சில்லறை வர்த்தகங்கள் செயல்படத் தொடங்கின. இருப்பினும் உணவு மற்றும் பானம், சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் போன்றவை முழுமையாக செயல்பட முடியாத நிலையில் இன்னும் உள்ளன.

இதன் காரணமாக பல நிறுவனங்கள் நிரந்தரமாக தங்கள் தொழிலை முடித்துவிட்டதாக குஷ்மன் & வேக்ஃபீல்டு என்ற அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

இதன் காரணமாக காலி இடங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் சில்லறை வர்த்தகச் சந்தை முற்றிலும் இறங்குமுகமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரம் மற்றும் இதர நகர பகுதிகளில் வாடகை சுமார் 10% குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புறநகர்ப் பகுதிகளில் இது 5% அளவுக்கு இருக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிடுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் அறிவியல் நிலையம் மற்றும் Snow City இன்று முதல் மீண்டும் திறப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg