பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது!

Clarke Quay riot arrested
5 arrested for rioting following brawl in Clarke Quay (Photo: NAVIN KUMAR/FB)

Clarke Quayஇல் நேற்று (டிசம்பர் 19) இரவு பயங்கர ஆயுதங்களுடன் நடந்த கலவரத்தை தொடர்ந்து, 21 முதல் 40 வயதுக்குட்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Eu Tong Sen ஸ்ட்ரீட்டில் நடந்த கலவரம் குறித்து இரவு 10.40 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அதன் பின்னர் காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்த நேரத்தில் சண்டையிட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

திருச்சி-சிங்கப்பூர் இருவழி செல்லும் பயணிகளுக்கு தினசரி விமானங்கள்..!

சம்பவ இடத்தில் இருந்த 27 வயது பெண்ணும், 36 வயது ஆணும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவில் இருந்தனர். மேலும், ஒழுங்கற்ற நடத்தைக்காக 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 40 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சையளிக்க அவர் SGH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மத்திய காவல் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணைகள் மற்றும் கேமரா காட்சிகள், இந்த சண்டையில் ஈடுபட்ட சிலரை அடையாளம் காண உதவியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 16 மணி நேரத்திற்குள் 21 முதல் 34 வயது வயதுக்குட்பட்ட நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள உணவகத்தில் ஏற்பட்ட தகராறின் காரணமாக பின்னர் சண்டை ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பயங்கர ஆயுதம் ஏந்தி கலவரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி விதிக்கப்படலாம் .

3ஆம் கட்டத்தில், வெளிநாட்டு ஊழியருக்கான கட்டுப்பாடுகள் ஏன் தளர்த்தவில்லை ? – அமைச்சர் டான் விளக்கம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…