3ஆம் கட்டத்தில், வெளிநாட்டு ஊழியருக்கான கட்டுப்பாடுகள் ஏன் தளர்த்தவில்லை ? – அமைச்சர் டான் விளக்கம்!

migrant workers larger issues
(Photo: TODAY)

சிங்கப்பூர் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகரும் சூழலில், வெளிநாட்டு ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று மக்கள் சிலர் குரல் கொடுக்கின்றனர்.

ஆனால், அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று மனிதவள இரண்டாவது அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் சர்வதேச வெளிநாட்டு ஊழியர்கள் தின சிறப்பு நிகழ்ச்சி!

வரும் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கும் சிங்கப்பூரின் 3ஆம் கட்டம் என்பது, COVID-19 கிருமித்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு திரும்புவதல்ல என்றும் டாக்டர் டான் விளக்கி கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நேரம் இதுவல்ல என்றும், ஊழியர்களிடையே COVID-19 மீண்டும் தோன்றுவதற்கான ஆபத்து உண்மையாகவும் கணிசமாகவும் இன்னும் இருந்துவருவதாகவும் அவர் கூறினார்.

மூன்றாம் கட்டத்தில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளில், மக்கள் எட்டு பேர் வரை ஒன்றுகூட முடியும், மேலும் மால்கள் மற்றும் திருமணங்களுக்கான உச்ச வரம்புகளும் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சில சர்வதேச ஊடகங்களும், உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது நியாயமற்றது என்று கூறுவதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

ஆனால், அப்படி கூறும் அவர்கள், பெரிய சிக்கல்களைத் கவனிக்க தவறிவிட்டனர் என்றும், COVID-19 மீண்டும் தோன்றுவதற்கான ஆபத்து உண்மையாகவும் கணிசமாகவும் இன்னும் இருப்பதாக அவர் கூறினார்.

தற்போதுள்ள குறிப்பிட்ட நோக்கத்திற்காக கட்டப்பட்ட தங்கும் விடுதிகளில் சராசரி தங்கியிருப்போர் விகிதங்கள் ஏப்ரல் முதல் தற்போது 60 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள்களும் COVID-19 தடுப்பூசியை எந்த கட்டணமும் இன்றி பெறுவார்கள் என்று டாக்டர் டான் தெரிவித்தார்.

பிளாட் ஒன்றில் தீ விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூர் தங்க கட்டிகளை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி.. 500 பவுன், ரூ.3 கோடி மோசடி!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…