ஜப்பானிய மொழியில் சரளமாக பேசும் “துப்புரவுத் தொழிலாளி பெண்” – பாராட்டு தெரிவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

malaysia-cleaner-japanese

துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரியும் பெண் ஒருவர், தன் வேலையின்போது சந்தித்த வெளிநாட்டு நபர்களிடம் சரளமாக ஜப்பானிய மொழியில் பேசுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியாவில் தேசிய மசூதிக்கு ஜப்பானிய பிரதிநிதிகள் வருகை தந்தனர், அப்போது தற்செயலாக நடந்த ஒரு சந்திப்பின் வீடியோவை பதிவு செய்த ஜப்பானிய ஆடவர் அதனை பெருமையுடன் வெளியிட்டுள்ளார்.

கொடூரமாக தீப்பிடித்து எரிந்த கார் – ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி மரணம்!

45 வினாடிகள் கொண்ட வீடியோவில், அவர் மலாய், ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மாறி மாறி பேசுவது அவர்களுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்ததாம்.

அந்தப் பெண்ணுடன் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த மூன்று ஆண்களும் அவர் சொல்வதைக் கவனமாகவும் பணிவாகவும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தப் பெண்ணின் மொழித்திறனைப் பாராட்டி நெட்டிசன்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Video and Image Credit: https://www.facebook.com/watch/?v=1146777779211070

சிங்கப்பூரில் காணாமல் போன திரு ஹாஷிம் பின் அஹ்மத்… தேடிவரும் போலீசார்