சிங்கப்பூரில் அதிகாரிகள் சோதனை… S$230,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

CNB officers seized drugs
(Photo: Central Narcotics Bureau)

செரங்கூன் மற்றும் அம்பர் (Amber) சாலையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சுமார் 3 கிலோ ஹெராயின் உட்பட சுமார் S$230,000 மதிப்புள்ள போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தந்தையை கொலை செய்த சந்தேகத்தின்பேரில் 14 வயது இளையர் கைது!

இதில் 55 மற்றும் 63 வயதுடைய இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர், மேலும் சுமார் S$1,780 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை, 55 வயது ஆடவர் கட்டளைகளுக்கு இணங்க மறுத்த காரணத்தினால், செரங்கூன் அவென்யூ 2 அருகே உள்ள அவரின் குடியிருப்பில் CNB அதிகாரிகள் வலுக்கட்டாயமாக சோதனை செய்தனர்.

அங்கு சோதனை செய்ததில், சுமார் 2,986 கிராம் ஹெராயின், 47 கிராம் ஐஸ் போதைப்பொருள், 51 கிராம் கஞ்சா, 149 எரிமின்-5 போதை மாத்திரைகள், இரண்டு பாட்டில்கள் மெதடோன் மற்றும் ஏராளமான போதைப் பொருட்கள் அடங்கிய 35 மூட்டைகள் மற்றும் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

(Photo: Central Narcotics Bureau)

அந்த நாளின் பிற்பகுதியில் நடத்தப்பட்ட பின்தொடர்தல் நடவடிக்கையில், CNB அதிகாரிகளின் ஒரு தனி குழு Amber சாலைக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் சோதனை நடத்தி 63 வயது நபரை கைது செய்தது.

மொத்தம் சுமார் 7 கிராம் ஹெராயின், 11 கிராம் ஐஸ் போதைப்பொருள், 8 கிராம் கஞ்சா மற்றும் 20 எரிமின -5 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. ஏராளமான போதைப் பொருட்கள் மற்றும் S$1,783 ரொக்கமும் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர்கள் அனைவரின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்பிட்ட நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள சிங்கப்பூர்!

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று பாதிப்பு – MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…