சிங்கப்பூர் செல்லவிருந்த பயணியிடம் 12.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் பறிமுதல்!

சிங்கப்பூர் செல்லவிருந்த பயணியிடம் 12.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் (Coimbatore International Airport) தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை கடத்துவது அதிகரித்து வரும் நிலையில், சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளையும் விமான நிலையத்தில் வைத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் விமான நிலையத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீ சிவன் கோயிலில் ‘மஹா சிவராத்திரி பூஜைகள்’ நடைபெறும் என்று அறிவிப்பு!

அந்த வகையில், கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி அன்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனத்தின் TR 541 என்ற விமானம் மூலம் சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் திருச்சி மண்டல சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவர் தனது பேக்கில் கட்டுக்கட்டான அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் திடலிலே வைக்கப்பட்ட உணவு – தற்போது மாறியுள்ளதாக நன்றி சொல்லும் ஊழியர்கள்

இதையடுத்து, அந்த பயணியிடம் இருந்து சுமார் 15,000 அமெரிக்க டாலர்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 12.33 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.