ஸ்ரீ சிவன் கோயிலில் ‘மஹா சிவராத்திரி பூஜைகள்’ நடைபெறும் என்று அறிவிப்பு!

Photo: Sri Sivan Temple

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் வரும் மார்ச் 08, 09 ஆகிய தேதிகளில் ‘மஹா சிவராத்திரி பூஜைகள்’ (Maha Sivarathiri Prayers) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

குடும்ப விழாவுக்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகளை நெகிழ வைத்த தொழிலாளி!

இது குறித்து இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் கெய்லாங் ஈஸ்ட் அவெனியூவில் (Geylang East Ave 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple) . வரும் மார்ச் 08- ஆம் தேதி மஹா சிவராத்திரியையொட்டி, இந்த கோயிலில் பூஜைகள் நடைபெறும். மார்ச் 08- ஆம் தேதி அன்று காலை 07.00 மணிக்கு சிவனுக்கு சிவ பஞ்சாக்ஷ்ர ஹோமமும், அபிஷேகமும், தீபாராதனையும், பிரசாதமும், மாலை 05.30 மணிக்கு உபய பூஜையும், தீபாராதனையும், பிரசாதமும், மாலை 06.00 மணிக்கு வெள்ளி ரத ஊர்வலமும், பிற்பகல் 03.30 மணிக்கு மஹா சனி பிரதோஷமும், இரவு 07.00 மணிக்கு முதல் கால பால்குட அபிஷேகமும், இரவு 10.00 மணிக்கு இரண்டாம் கால பால்குட அபிஷேகமும் நடைபெறும்.

மார்ச் 09- ஆம் தேதி அதிகாலை 01.00 மணிக்கு மூன்றாம் கால பால்குட அபிஷேகமும், அதிகாலை 04.00 மணிக்கு நான்காவது கால பால்குட அபிஷேகமும், மாலை 05.00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசையும், மாலை 05.30 மணிக்கு திருக்கல்யாணமும், தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்படும்.

“செய்யும் வேலையை பொறுப்புடன் செய்யணும்” – ஊழியரின் மோசமான செயலால் கடுப்பான பெண்

பக்தர்கள் 0மார்ச் 08- ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இரவு 07.00 மணி முதல் மார்ச் 09- ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 04.00 மணி வரை பால்குடம் வழங்கலாம். ரசீதுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.