குடும்ப விழாவுக்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகளை நெகிழ வைத்த தொழிலாளி!

குடும்ப விழாவுக்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகளை நெகிழ வைத்த தொழிலாளி!
Video Crop Image

 

புதுக்கோட்டையில் குடும்ப விழாவுக்கு வருகை தந்த சிங்கப்பூர் முதலாளிகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தொழிலாளி ஒருவர் உற்சாக வரவேற்பை அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த தானம் செய்த வெளிநாட்டு ஊழியர்கள்!

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். மகன்களின் காதணி விழாவுக்காக சொந்த ஊருக்கு திரும்பிய தமிழரசன், தான் பணியாற்றிய வரும் சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் சக தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

குடும்ப விழாவுக்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகளை நெகிழ வைத்த தொழிலாளி!
Video Crop Image

மலேசிய ரிங்கிட்டு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய உச்சம்!

அவரது அழைப்பை ஏற்று சிங்கப்பூரில் இருந்து தொழிலதிபர்கள் லீ வே குவான், என் ஜி யூச் ஆகியோர் அறந்தாங்கி நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு மேள தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்ற தமிழரசனின் குடும்பத்தினர், பட்டு வேட்டி, சர்ட்டை அணிவித்து, குதிரை வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.