ரத்த தானம் செய்த வெளிநாட்டு ஊழியர்கள்!

ரத்த தானம் செய்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: Migrant Workers' Centre

 

O+ மற்றும் O- ரத்த வகைகள் சிங்கப்பூரில் பற்றாக்குறையாக உள்ளன. இதனால் O+, O- ரத்த வகைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதியடைகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வுக் காணும் வகையில், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (Singapore Red Cross), தன்னார்வலர்களுடன் இணைந்து ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

மலேசிய ரிங்கிட்டு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய உச்சம்!

அந்த வகையில், பிப்ரவரி 18- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சுமார் 40- க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். வெளிநாட்டு ஊழியர்களுக்கு, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் கட்டணம் உயரும்

வெளிநாட்டு ஊழியர்களின் ரத்த தானம் மற்றவர்களை ரத்த தானம் செய்ய ஊக்குவித்தது என்றால் மிகையாகாது.