‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக, தமிழகத்தின் திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ஸ்கூட் நிறுவனம், விமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில், கோவை, சிங்கப்பூர் வழித்தடத்தில் தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது. இது தினசரி மற்றும் நேரடி விமான சேவைகள் ஆகும்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்டப் பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால், இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

500 புதிய ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்!

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.