‘கோவை- சிங்கப்பூர் இடையே ஸ்கூட் விமான சேவை’- மே மாதம் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்திற்கு (Singapore Airlines) சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), தமிழகத்தில் திருச்சி, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி, கோவை, சென்னை ஆகிய நகரங்களுக்கும் தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருகிறது.

“இவ்வாண்டில் அதிகமான ஊழியர்கள் வேலையை இழக்கலாம்” – ஆதரவு வேண்டி வலுக்கும் கோரிக்கை

அந்த வகையில், கோடைக்காலம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்று சுற்றிப்பார்க்க சுற்றுலாப் பயணிகள் தயாராகி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கோவை- சிங்கப்பூர் ஸ்கூட் விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் காணப்பட்ட அழிந்துவரும் அரியவகை “சிறுத்தைப் பூனை”

குறிப்பாக, கோவை, சிங்கப்பூர் வழித்தடத்தில் வரும் மே மாதம் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Flyscoot Airlines) நிறுவனத்தின் https://www.flyscoot.com/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Verified by MonsterInsights