வணிக ரீதியான பயணிகள் விமானங்கள்… இந்தியாவுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை

வணிக விமானங்களை (commercial flights) பகுதியளவாக மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை இந்தியா-சிங்கப்பூர் இடையே நடைபெற்றுவருகிறது.

இந்த தற்காலிக இருதரப்பு ஏற்பாட்டிற்காக இந்திய அதிகாரிகளுடன் சிங்கப்பூர் கலந்துரையாடி வருகிறது.

ஊழியர்களை ஏற்றிச்செல்ல லாரிக்கு பதில் மினிபஸ்: இதுவரை 25 நிறுவனங்கள் கையெழுத்து!

தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்திற்காக VTL சிறப்பு பயண திட்டம் தொடங்கப்பட உள்ளதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது.

வணிக ரீதியான திட்டமிடப்பட்ட பயணிகள் விமானங்களை மட்டுமே VTL விமானங்களாக நியமிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

வணிக விமானங்களின் பகுதியளவு மறுதொடக்கம் கூட, இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணிகளுக்கான தெரிவுகளை விரிவுபடுத்தும்.

செல்லுபடியாகும் விசாக்கள் மற்றும் முறையான நுழைவு ஒப்புதல்களுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய பயணிகள் தனிமைப்படுத்தல் இல்லாமல் சிங்கப்பூர் பயணிக்க முடியும் இதுவே VTL திட்டம்.

தடுப்பூசி போடப்பட்ட பயண அனுமதிச் சீட்டுக்கான (VTP) விண்ணப்பங்கள் நாளை நவம்பர் 22ஆம் தேதி தொடங்கும்.

மேலும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நவம்பர் 29ஆம் தேதி முதல் VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்குள் நுழையத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாடுகளை கூடுதலாக தளர்த்திய சிங்கப்பூர்