கட்டுப்பாடுகளை கூடுதலாக தளர்த்திய சிங்கப்பூர்

Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூர் இன்று (நவம்பர் 20) கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதாக அறிவித்துள்ளது, இதில் சமூகக் ஒன்றுகூடல் மற்றும் F&B உணவகங்களில் உணவருந்துவதற்கான அதிகபட்ச குழு அளவை அதிகரித்துள்ளது.

ஏனென்றால், ஒட்டுமொத்த நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், மருத்துவமனையின் நிலைமையும் பெரும்பாலும் மேம்பட்டுள்ளன என்று அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு கூறியது.

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் விமானங்கள்: பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றம்

கூடுதலாக, மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் தங்கள் தடுப்பூசி பூஸ்டர்களைப் பெற்றுள்ளனர் அல்லது பெறுவார்கள்.

வரும் நவம்பர் 22 முதல், சமூக ஒன்றுகூடல் குழு அளவுகள் இரண்டு நபர்களில் இருந்து ஐந்து நபர்களாக அதிகரிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாளும் ஐந்து வெவ்வேறு வருகையாளர்களை அனுமதிக்கலாம்.

அதேபோல, வரும் நவ. 22 ஆம் தேதி முதல், அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் வரை கொண்ட குழுக்கள் F&B உணவகங்களில் ஒன்றாக உணவருந்த அனுமதிக்கப்படும்.

தடுப்பூசி போடப்படாத குழந்தைகள், 12 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் வரை, குழுவில் சேர்க்கப்படலாம்.

“கால்நடைகளை போல லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம், ஒரு தசாப்த கால பிரச்சினை” – லாரிகளுக்கு மாற்றாக மினிபேருந்து இருக்குமா?