ஊழியர்களை ஏற்றிச்செல்ல லாரிக்கு பதில் மினிபஸ்: இதுவரை 25 நிறுவனங்கள் கையெழுத்து!

வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது - தெரிந்துகொள்ளுங்கள்
(Photo: Reuters/Edgar Su)

தங்கள் ஊழியர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு உடனடி மாற்று விருப்பம் இந்த Aespadaவின் மினிபேருந்து சேவை என்று அதன் நிறுவனர் திரு ஜீன் கிரிஸ்டோபி லி கூறியுள்ளார்.

இதற்கான கட்டண விவரங்களை வெளியிட்ட அந்நிறுவனம், அந்த பேருந்துகளில் ஏழு, ஒன்பது அல்லது 13 பணியாளர்களை ஏற்றிச் செல்லலாம் என்றும் கூறியுள்ளது.

கட்டுப்பாடுகளை கூடுதலாக தளர்த்திய சிங்கப்பூர்

ஒவ்வொரு பயணமும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து S$55 முதல் S$65 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 நிறுவனங்கள் இதுவரை இந்த சேவையை பெற கையெழுத்திட்டுள்ளதாக திரு லி கூறினார்.

நீண்ட கால, தினசரி பயணங்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப தற்காலிக சேவைகளுக்கான திட்டமும் இருப்பதாக அவர் கூறினார்.

“கால்நடைகளை போல லாரிகளில் ஊழியர்கள் பயணிக்கும் வழிமுறை 10 வருட கால பிரச்சினை” என்று திரு லி கூறினார்.

அவர்கள் மழைக்காலங்களில் லாரியில் பயணிக்கும்போது குப்பைப் பைகளுக்குள் மறைந்து கொள்ள முயற்சிப்பதை நீங்கள் காணலாம், என்றார் அவர்.

ஆகவே, இதுவே விபத்துகளில் இருந்து ஊழியர்களை பாதுகாக்க சிறந்த வழிமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் விமானங்கள்: பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றம்