சிங்கப்பூரில் பயணிகள் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும் – LTA..!

சிங்கப்பூரில் சர்க்யூட் பிரேக்கர் காலம் முடிந்த பிறகும் பொது போக்குவரத்து பயணிகள் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

சர்க்யூட் பிரேக்கர் காலம் முடிவடைந்த பிறகு, போக்குவரத்துகளில் கூட்டம் திரும்பும், அப்போது ​​பாதுகாப்பான இடைவெளி எளிதில் பின்பற்ற கூடியதாக இருக்காது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) திங்களன்று (ஏப்ரல் 20) முகநூலில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 1,111 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

எனவே, அனைத்து பயணிகளும் பொது போக்குவரத்தில் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையில், பயணிகள் தொடர்ந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Further adjustments have been made to our train frequencies to ensure commuters can keep a safe distance from one…

Posted by Land Transport Authority – We Keep Your World Moving on Monday, April 20, 2020

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 19வது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!