சிங்கப்பூரில் வேலையிழந்தோரில் 39 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்தது..!

Companies continued to hire in Q2 but at slower pace: MOM
Companies continued to hire in Q2 but at slower pace: MOM (PHOTO: MOM/Facebook)

பொருளாதாரத்தில் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் இருந்தபோதிலும், நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் தொடர்ந்து ஊழியர்களை பணியமர்த்தின.

மேலும் அது மெதுவான வேகத்தில் இருந்ததாகவும், மனிதவள அமைச்சகத்தின் (MOM) ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பிற்கு ஆளானவர்களை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 2,160 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளை கொண்டு இந்த கணக்கெடுப்பு ஜூன் மாதத்தில் MOMஆல் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 13,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு திரும்ப முடியவில்லை..!

இந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்குள் மட்டும், வேலையிழந்தோரில் 39 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்தது என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ​​2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அது சற்று குறைவு, அதாவது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட 47 சதவீத ஊழியர்கள், அதே ஆண்டில் ஜூன் மாதத்திற்குள் வேலைகளை பெற்றனர்.

இருப்பினும், வேலைக்கு எடுப்பதில் மெதுவான போக்கு இருந்தபோதிபோலும், மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டோருக்கு அதிகளவு சம்பள குறைவு ஏதும் இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.

இதில் 30 -40 வயதுக்கு உட்பட்ட வேலையிழந்த ஊழியர்களில், நிபுணத்துவ திறன், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு புதிய வேலை கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு – தூதரகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…