“சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களையும் கவர்ந்து ஈர்க்க வேண்டும்”

The Ministry of Manpower has said that the proportion of those laid off last year was lower than during the recession.
The Ministry of Manpower has said that the proportion of those laid off last year was lower than during the recession.

சிங்கப்பூரில் பொருளியல் மீட்சி ஏற்ற இறக்கமாக இருப்பதால், திறமை வாய்ந்தவர்களை கவர்ந்து ஈர்க்க உலகளவில் போட்டி கடுமையாகிறது.

நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் திறன் வளர முதலீடு செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹேங் சுவீ கியட் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 15 நடைபெற்ற லியான்ஹே ஜாபாவோ சிங்கப்பூர் பட்ஜெட் 2021 வர்த்தக மன்றத்தில் கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் திரு ஹெங், நிறுவனங்களும் ஊழியர்களும் ஒன்றிணைந்து பணியாற்றக்கூடிய சில வழிகளை சுட்டிக் காட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் அதிக வருகையாளர்களை கொண்ட பொது இடங்களில் SafeEntry Gateways பதிவு முறை..!

ஊழியர்களுடனான நீண்டகால உறவுகளை நிறுவனங்கள் கருத்தில்கொண்டு, திறன்களை மேம்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும்.

இவற்றின் காரணமாக தொழில்துறையில் அதிகமான போட்டியும் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்றும், சிறப்புத் தேச்சி பெற்ற வெளிநாட்டினரையும் கவர்ந்து ஈர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவங்கள், சமூகத்திற்கு உதவவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை சிங்கப்பூரரை பொறுத்த வரை சாத்தியமானது என்று தெரிய வந்துள்ளதாக துணை பிரதமர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் எப்போது திறக்கும்?