சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் எப்போது திறக்கும்?

(Photo: ET)

இந்த ஆண்டின் இறுதிக்குள் சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் திறக்கும் என நம்பிக்கை உள்ளதாக துணை பிரதமர் திரு. ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், COVID-19 தொற்றுநோய் சூழ்நிலையானது நிச்சயமில்லாத நிலையில் தொடர்ந்து காணப்படுவதால், வர்த்தகங்கள் மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டமிடுவது அவசியம் என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இலவச முகக்கவசங்களை பெற 61 முறை மோசடி முயற்சி – ஆடவர் கைது

எல்லைகளை திறக்கும் முன்பு, அண்டை நாடுகளிலும் சிங்கப்பூருக்கு சமமான வேகத்தில் தடுப்பூசி பணிகள் நடைபெறுகிறா என்பது கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

Lianhe Zaobao சீன செய்தித்தாள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் திரு. ஹெங் கலந்துகொண்டு அதனை தெரிவித்தார்.

புதிய தொற்று பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து, இருவழிப் பயண திட்டத்தை நிறைவேற்றுவது சிரமமானதாக திரு. ஹெங் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் 100,000 ஊழியர்களுக்கு தடுப்பூசி – இதனால் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்!