சீனாவின் முன்னாள் அதிபரின் மறைவுக்கு சிங்கப்பூர் அதிபர், பிரதமர் இரங்கல்!

Photo: Singapore President Halimah Yacob Official Facebook Page

சீனாவின் முன்னாள் அதிபரும், சீன கம்யூனிஸ்டு ஜியாங் ஜெமின் (வயது 96) நேற்று (30/11/2022) மதியம் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள சீன அரசு, நாடு முழுவதும் உள்ள அரசுக் கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், சீனாவின் முன்னாள் அதிபர் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

திருமணப் பந்தியில் நடந்த தகராறு ! – பிரம்படியுடன் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

அந்த வகையில், சீன முன்னாள் அதிபர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சீனாவின் பிரதமர் லீ கெச்சியாங்கிற்கும் (Li Keqiang) தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர்.

சிங்கப்பூர் அதிபரின் கடிதத்தில், “முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமினின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் சார்பில், சீன மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் ஜியாங் ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார், அவர் நீடித்த பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், விரைவான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் காலகட்டத்தில் சீனாவை வழிநடத்தினார், மேலும் சீனாவின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக உயர்த்தினார். அதிபர் ஜியாங் தனது நாட்டிற்கான சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக நினைவு கூறப்படுவார்” என்று புகழாரம் சூட்டினார்.

இனி அத்துமீறினால் அவ்ளோதான்! – சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலத்தைப் பாதுகாக்க கடுமையாக்கப்பட்ட தண்டனைகள்!

அதேபோல், சிங்கப்பூர் பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், “முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமினின் மறைவுக்கு சிங்கப்பூர் அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சீனாவின் வளர்ச்சியின் ஒரு முக்கியமான கட்டத்தில் அதிபர் ஜியாங் தலைமைத் தாங்கினார். அவரது நிலையான தலைமைத்துவமும், சீர்திருத்தம் மற்றும் திறப்புகளை உறுதியுடன் செயல்படுத்துவதும், உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் ஒருங்கிணைப்பு மற்றும் உலக அரங்கில் அதன் வெளிப்பாட்டிற்கு வழிகாட்டுவதில் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.