கட்டுமான தளத்தில் கிரேனில் 70மீ உயரத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியருக்கு திடீர் காயம்

construction site worker injured scdf rescues
SCDF

பீச் ரோட்டில் (Beach Road) உள்ள கட்டுமான தளம் ஒன்றில் சுமார் 70 மீட்டர் உயரத்தில் டவர் கிரேனில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அந்த ஊழியரால் பாதுகாப்பாக கீழே இறங்கி வர முடியவில்லை.

வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்

இதனை அடுத்து, மத்திய தீயணைப்பு நிலையத்திலிருந்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் உயரடுக்கு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவின் (DART) நிபுணர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று, நவம்பர் 12ஆம் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில் பீச் ரோட்டில் உள்ள கட்டுமான தளத்தில் நடந்தது.

இரண்டு தீயணைப்பு வீரர்கள் ஏணியின் உதவியுடன் மேலே ஏறி, கிரேன் மேடையில் காயத்துடன் படுத்திருந்த அந்த ஊழியரைக் கண்டனர்.

SCDF

அதனை தொடர்ந்து, ஊழியரின் கால் உடைந்துவிட்டதாக சந்தேகம் அடைந்த வீரர்கள், காயம்பட்ட காலில் கட்டு போட்டு அசையாமல் இருக்க செய்தனர்.

இறுதியாக காயமடைந்த ஊழியர் தரையில் இறக்கப்பட்டதும், SCDF ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மதிப்பீடு செய்து, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

SBS பேருந்து கதவு மூடியதில் கீழே விழுந்த பெண் (காணொளி) – ஓட்டுனர் மீது நடவடிக்கை