$50 கள்ள நோட்டு அடித்து சிக்கிய வெளிநாட்டு ஊழியர் – தங்கும் விடுதி கடையில் பணத்தை மாற்ற முயன்றபோது சிக்கிய கதை

more-public-sector-construction-projects-come-under-stricter
Photo: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் கள்ள நோட்டு அடித்து சிக்கிக்கொண்டதன் காரணமாக அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வேலையிடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக 21 வயதான அவர் வேலையை இழந்துள்ளார். அதனால் வருமானம் இல்லாமல் இருந்ததாகவும், இதனால் $50 நோட்டுகளை போலியாக தயாரித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தேசிய தினத்தை முன்னிட்டு Singapore Pools நடந்தும் மெகா ஜாக்பாட் குலுக்கல்

அவர் பங்களாதேஷ் ஊழியர் என்றும், குற்றம் நடந்தபோது அவர் கட்டுமான ஊழியராக பணிபுரிந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கள்ள பண நோட்டுகளை அடித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதால், நேற்று திங்களன்று (ஜூலை 24) அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதே போன்ற மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சர்தார் எம்டி ரஜவுல் இஸ்லம் என்ற அவருக்கு வேலையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி அன்று மனிதவள அமைச்சகம் அவருக்கு Special Pass அனுமதி வழங்கியதாக நீதிமன்றம் விசாரித்தது.

காயம் காரணமாக வேலை செய்ய முடியாமல் இருந்ததாகவும், தங்கும் விடுதி மற்றும் பிறரிடமிருந்து நன்கொடையாக கிடைக்கும் இலவச உணவை அவர் நம்பியிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், கள்ள பண நோட்டுகளை அடிக்க முடிவு செய்த அவர், சக பங்களாதேஷ் ஊழியரிடமிருந்து வாங்கிய பிரிண்டரைப் பயன்படுத்தி, S$50 நோட்டின் இருபுறத்தையும் நகல் எடுத்து போலியாக உருவாக்கினார்.

பின்னர், அந்த நோட்டை எடுத்துக்கொண்டு தங்கும் விடுதியில் உள்ள கடைக்கு சென்று பொருள் வாங்க முற்பட்டுள்ளார்.

நோட்டை வாங்கிய கடைக்காரருக்கு எதோ சரியாக இல்லை என்ற சந்தேகம் வர, பின்னர் அது நல்ல நோட்டு இல்லை என்பது உறுதி செய்தனர்.

பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஊழியர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கும் முதலாளிகள்… ஊழியர்களுக்கு பக்கபலமாக நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு