ஒடிஷா மாநில முதலமைச்சருடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

Photo: Odisha Chief Minister Naveen Patnaik Official Twitter Page

ஒடிஷா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வரில் ‘மேக் இன் ஒடிஷா’ (Make in Odisha 2022) என்ற தலைப்பில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி அன்று தொடங்கியது. வருகிற டிசம்பர் மாதம் 4- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, இந்த மாநாட்டை ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.

வெளிநாட்டிற்கு சென்றால் இவ்ளோ சம்பளம் கிடைக்கும் ! – தாய்நாடு இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள்!

இந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் மற்றும் அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், முன்னணி ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்துக் கொண்டுள்ளதாகவும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் இறுதிச் செய்யப்பட்டு முதலமைச்சர் நவீன் பட்நாயக் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.

இந்த மாநாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ள நிலையில், ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சியோங் மிங் ஃபூங் (Cheong Ming Foong, Consul General of Singapore) நேற்று (01/12/2022) நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள், ஒடிஷா மாநில அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பணியிடங்களில் இந்திய ஊழியர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு!

இந்த சந்திப்பு குறித்து ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் தூதர் சியோங் மிங் ஃபூங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தொழில், வணிகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.