பணியிடங்களில் இந்திய ஊழியர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு!

சிங்கப்பூரின் மெர்லிமாவ் சாலையில் உள்ள ‘சிங்கப்பூர் ரிஃபைனிங் கம்பெனி’ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 41 வயதான நபர், கடந்த நவம்பர் மாதம் 25- ஆம் தேதி முற்பகல் 11.00 மணியளவில் ஜூரோங் தீவு அருகே உள்ள கடலில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துச் சென்றனர்.

ஒரேயொரு ‘டச்’ போதும்! – தன் மொபைலே தனக்கு சோதனைக்கருவி! தொற்றை கண்டறியவரும் கண்டுபிடிப்பு!

பின்னர், கடலில் விழுந்து உயிரிழந்த இந்திய ஊழியரின் சடலத்தை அன்றைய தினமே மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் நடைபெற்ற தொங்கு சாரா பணிகளை நிறுத்தும்படி, அந்நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், புலன் விசாரணையையும் மனிதவள அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

அதேபோல், நவம்பர் மாதம் 26- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு சிங்கப்பூரில் கேர்ன்ஹில் சர்க்கிளில் உள்ள ‘ஹில்டாப்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு காலியான வீட்டில் துப்புரவு வேலையில் ஈடுபட்டிருந்த 69 வயதான சிங்கப்பூரர், வீட்டின் வெளிப்புற ஜன்னல் கதவுகளைத் துடைத்துக் கொண்டிருந்த போது தரையில் இருந்து சுமார் 9 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த ஊழியர் பாதுகாப்பு சாதனம் எதையும் அணிந்திருக்கவில்லை என்றும், ‘ஹோம் கிளின்ஸ் கிளீனிங் அண்ட் லாண்டரி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிரடி சோதனையில் சிக்கிய 6 பேர் – குற்றம் உண்மையா… தொடரும் விசாரணை

ஊழியர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயரமான இடங்களில் நடக்கும் வேலைப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி, அந்நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்த நாளில் இந்திய ஊழியர் உட்பட இரண்டு ஊழியர்கள் உயிரிழந்திருப்பது சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.