“இந்தோனேசியாவின் படாமில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் இடமாற்றம்”- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs In Singapore) இன்று (29/12/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தோனேசியா நாட்டின் படாமில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் (Singapore Consulate-General in Batam) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3- ஆம் தேதி முதல் சிங்கப்பூர் துணைத் தூதரகம் புதிய வளாகத்தில் செயல்படும். புதிய முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் பின்வருமாறு:

பயணிகள் பயன்பெறும் வகையில், சிங்கப்பூரில் 90க்கும் மேற்பட்ட விரைவு பரிசோதனை நிலையங்கள்!

நிலை 3 பன்பில் குடியிருப்பு (Level 3 Panbil Residence),
ஜலான் அஹ்மத் யானி, முகா குனிங் (Jalan Ahmad Yani, Muka Kuning),
படாம் 29433, இந்தோனேஷியா (Batam 29433, Indonesia)
தொலைபேசி: +627783720000,
பேக்ஸ்: +627783720007,
மின்னஞ்சல் முகவரி: singcon_bth@mfa.sg,
இணையதள முகவரி: www.mfa.gov.sg/batam.

சிங்கப்பூரில் ஆறாவது இலவச முகக்கவசம் விநியோகம்!

சிங்கப்பூர் துணை தூதரகம், திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 08.30 AM மணி முதல் மாலை 05.00 PM மணி வரை செயல்படும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.

வரும் ஜனவரி மாதம் 1 முதல் 2- ஆம் தேதி வரை துணைத் தூதரகம் அதன் தற்போதைய வளாகத்தில் இருந்து புதிய முகவரிக்கு மாறும். இந்த நேரத்தில், துணைத் தூதரகம் மூடப்படும். துணைத் தூதரகத்தின் உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் அதன் பணி அதிகாரியை +628116916916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.