சிங்கப்பூரில் ஆறாவது இலவச முகக்கவசம் விநியோகம்!

(PHOTO: Seah Kian Peng / FB for illustrative purposes)

கோவிட்-19க்கு எதிராக குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க, தெமாசெக் நிறுவனத்தின் ஆறாவது முகக்கவச விநியோகம் நடைபெற உள்ளது.

அதற்காக நாடு முழுவதும் புதிய முகக்கவச விநியோக இயந்திரங்கள் நிறுவப்படுகின்றன.

பயணிகள் பயன்பெறும் வகையில், சிங்கப்பூரில் 90க்கும் மேற்பட்ட விரைவு பரிசோதனை நிலையங்கள்!

குடிமக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 10 முதல் 23 வரை தங்கள் இலவச முகக்கவசங்களை இயந்திரங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

சமீபத்திய இயந்திரங்களில் அச்சிடப்பட்ட தகவல்களின்படி, முகக்கவசங்கள் புதிய அளவுகளில் வரும் என்றும் கூறியுள்ளது.

வரவிருக்கும் விநியோகம் பற்றிய கூடுதல் விவரங்களை அடுத்த வாரம் வழங்குவதாக தெமாசெக் அறக்கட்டளை கூறியது.

அதன் முந்தைய விநியோகங்களில், பல்வேறு வகையான முகக்கவசங்களை நிறுவனம் விநியோகித்துள்ளது.

அதாவது, அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் வரை அது விநியோகம் செய்துள்ளது.

பாலியல் கிளர்ச்சி சேவைகளை வழங்கும் மசாஜ் பார்லர்கள்: “ஏஜென்சிக்கு S$10,000 கட்டி வருகிறோம்” – பெண் ஊழியர்களின் பேட்டி