சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகள்..!

Human Resources Minister Jaspin Dio said the government has long been working with the Singapore Chamber of Commerce to formulate a plan to distribute the manpower to employers who are more or less the same, to inform other employers of their plight.
Human Resources Minister Jaspin Dio said the government has long been working with the Singapore Chamber of Commerce to formulate a plan to distribute the manpower to employers who are more or less the same, to inform other employers of their plight. (Photo: Todayonline)

மனிதவளம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள முதலாளிகள், மற்ற முதலாளிகளிடம் அவர்களின் நிலைமையைத் தெரிவித்து மனிதவளத்தை முதலாளிகளுக்கிடையே பகிரும் திட்டத்தை வகுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வகுக்க அரசாங்கம் நீண்டகாலமாகவே சிங்கப்பூர் வர்த்தக சம்மேணத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஜோசபின் டியோ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தல் – ‘அனுமதி ரத்து செய்யப்படலாம்’ : MOM

பணிகளை தொடர முடியவில்லை என்றால் ஊழியர்களை சிங்கப்பூரில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டுமா என்ற மதிப்பீட்டை முதலாளிகளும் ஊழியர்களும் செய்யவேண்டிய நேரம் வரும். அது ஒவ்வொரு நிறுவனத்தையும் பொறுத்துள்ளது என்று டியோ கூறியுள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் நியாயமான நடைமுறைகள் எதிர்பார்க்கப்படும் என்றும் ஊழியர்களின் சூழ்நிலையை கருதி அவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் டியோ கூறியுள்ளார்.

மனிதவளம் தேவைப்படும் துறைகளை கண்டறிந்து அந்த துறைகளுக்கு ஊழியர்களை மாற்றும் வாய்ப்பை முதலாளிகளுக்கு வழங்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என்று டியோ தெரிவித்துள்ளார்.

ஒரு துறையில் இருக்கும் முதலாளி தனது தொழிலை பேண முடியவில்லை என்றாலும் மற்ற துறைகள் சார்ந்த தொழில்களும் பேண முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாளிக்கான கட்டணத்தில் தள்ளுபடி உதவிகள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன, பணிகளை தொடர முடியாத முதலாளிகளுக்கு இதே கட்டண உதவிகள் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பும் ஊழியர்களைத் திருப்பி அனுப்பும் ஏற்பாடுகளை வெளிநாடுகளுடன் இணைந்து அரசாங்கம் வழி நடத்ததும் என்று அமைச்சர் ஜாசபின் டியோ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 569 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!