வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தல் – ‘அனுமதி ரத்து செய்யப்படலாம்’ : MOM

சுமார் 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அனுமதி (EP) வைத்திருப்பவர்கள் குற்றவியல் சார்ந்த குற்றங்களில் தண்டனை பெற்றதன் பிறகு அல்லது வேலை அனுமதி விண்ணப்பங்களில் தவறான அறிவிப்புகளை வெளியிட்டதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்களுடைய வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் எந்த வகையான வேலை அனுமதி வைத்திருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல், குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்களாக இருந்தால் சிங்கப்பூரில் வேலை செய்ய அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 569 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

COVID-19 நடவடிக்கைகளை மீறி EP வைத்திருப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஊடக கேள்விகளுக்கு பிறகு மனிதவள அமைச்சு (MOM) திங்களன்று (ஜூன் 1) இதனை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மற்றும் பாதுகாப்பான இடைவெளி விதிகளை கடைபிடிப்பது ஆகியவை அதில் அடங்கும்.

மேலும், சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று MOM குறிப்பிட்டுள்ளது.

வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காகவும் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் விதிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு MOM நினைவூட்டியது.

வேலை அனுமதி (Work pass) வைத்திருப்பவர்களில் EP., S Pass மற்றும் work permits வைத்திருக்கும் வெளிநாட்டினர் உள்ளனர்.

வேலை அனுமதியில் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டினர் சிங்கப்பூர் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகள், அவற்றின் வடிவமைப்பு ஆகியவற்றில் புதிய விதிமுறைகள்..!