கோவிட்-19 கட்டுபாட்டு விதிகளை மீறிய கடைகளுக்கு தண்டனை!

Photo: stackpathdns

சிங்கப்பூரில் தற்போது கோவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த, அரசு அடுத்த மாதம் நவம்பர் 21ம் தேதி வரை கோவிட்-19 கட்டுபாடுகளை நீட்டித்துள்ளது.

இதற்கிடையில் மனிதவள அமைச்சு, கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1000க்கு மேற்பட்ட கடைகளையும், 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் மக்களையும் விசாரித்து வந்துள்ளது.

கோவிட்-19 கட்டுபாடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடை முதலாளிகளுக்கு பெரும் நெருக்கடி!

இவ்விசாரணையில் பல கடைகள் மற்றும் பலர் கோவிட்-19 கட்டுபாட்டு விதிகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதில் கிட்டதட்ட 24 உணவு & பானக் கடைகள் மற்றும் 24 நபர்களுக்கு விதிகளை மீறி செயல்பட்டதிற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுபாடுகளை மீறிய அனைத்து கடைகளுக்கும் 15 நாட்கள் கட்டாயமாக கடையை மூடும்படி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட கடைகளில் டெலி ஃபிரானஸ் மற்றும் கோப்பிதியாம் போன்ற கடைகளும் அடங்கும். கோப்பிதியாம் கடை அக்டோபர் 25ம் தேதி வரை செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக தடுப்பூசிப் போட்டுவிட்டார்களா, இல்லையா என்பதை சரியாக பரிசோதிக்காமல், வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதித்ததால் மவுண்ட் பேட்டன் சாலையில் அமைந்திருக்கும் காத்தோங் ஈட்டிங் ஹவுஸ் கடைக்கு 10 நாட்கள் கடையை மூடும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

சர்க்குலர் சாலையில் அமைந்திருக்கும் பிங்க் வேல் கடை மற்றும் அருகாமையில் உள்ள இதர கடைகள் மீண்டும் மீண்டும் விதிகளை மீறி குற்றம் செய்ததால், இக்கடைகளை 20 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருசில கடைகளுக்கு சமாதன முறையில் அபராதங்களும் போடப்பட்டுள்ளது. மேலும் கோவிட்-19 கட்டுபாட்டு விதிகளை மீறிய 24 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுபாட்டு காலங்களில் தொடர்ச்சியாக அதிகாரிகளால் சோதனை நடத்தப்படும், அதனால் கடைகள் மற்றும் மக்களும் விதிகளை மீறாமல் முறையாக செயல்பட வேண்டும்.

இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று மனிதவள அமைச்சு எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் Employment Pass முறையை கடுமையாக்க கோரிக்கை!