சிங்கப்பூரில் Employment Pass முறையை கடுமையாக்க கோரிக்கை!

Photo: Careers of Agoda

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு மற்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸையும் சேர்ந்த ஒரு சிறப்புப் பணிக்குழு பல நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கி கிட்டதட்ட ஏறத்தாழ 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கருத்தில் கொண்டு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

இக்கலந்துரையாடலுக்கு பின் தொழிலாளர் இயக்கம் சில கோரிக்கைகளை அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.

தங்குவிடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5000 படுக்கைகள் ஒதுக்கீடு!

வெளிநாட்டினரிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்குவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்தார்.

மேலும் அனுபவம் வாய்ந்த சீனியர்ஸ் வேலை இழந்துவிட்டால் மீண்டு வருவதும் பெரும் சவாலாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எம்பிளாய்மண்ட் பாஸ்தாரர்களுக்கான பணியமர்த்தும் நடைமுறையை கடுமையாக்குவதன் மூலம் சிங்கப்பூரர்கள் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதற்கான பரிந்துரைகளை சிறப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினருக்கான வேலை அனுமதி அவர்களின் பணியின் தரத்தை பாெறுத்தே அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சிங்கப்பூர் பிஎம்இ ஊழியர்களுக்கு, வெளிநாட்டு ஊழியர்களை விட அதிக தேர்ச்சிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.

மனிதவளத் தரங்களையும் உயர்த்த வேண்டுமென்று பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை இல்லாதவர்கள் மற்றும் வேலையிழந்தவர்கள் புதிய வேலைகளைப் பெறுவதற்கு உதவியாக போதுமான நிதியுதவி போன்ற ஆதரவுகளை ஏற்பாடு செய்துதர வேண்டும்.

இவ்வாறு செய்யும் நிதியுதவியுடன், துணை வருவாய் நிவாரணமும் கிடைப்பது போன்ற அம்சங்களையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

மேலும் தொழிற்சார்ந்த அமைப்பில் இருப்பவர்களுக்கும், அதிக அனுபவமுடைய ஊழியர்கள் மற்றும் வேலையிழக்கும் எளியவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் வகையில் இந்த நடைமுறையின் அம்சங்கள் அமைந்திருக்க வேண்டும்.

இவ்வாறு எம்பிளாய்மண்ட் பாஸ்தாரர்களுக்கான பணியமர்த்தும் நடைமுறையை கடுமையாக்கும் விதமாகவும், தரமாக்கும் விதமாகவும் பல கோரிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது சிறப்பு பணிக்குழு.

(பிஎம்இ) மேலாளர்கள், நிபுணர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உதவும் வகையில் சிறந்த முயற்சிகளை செய்ய குறிப்பிட்ட காலம் கலந்துரையாட வேண்டும் போன்ற அம்சங்களும் இக்கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் வேலை நியமனம் மற்றும் வேலைவாய்ப்பு பெறும் அளவிற்கு ஊழியர்கள் தங்களுடைய தகுதியையும், திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அக்குழு தெரிவித்தது.

வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அதனை சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முத்தரப்பு பணிக்குழு அமைக்க வேண்டும் என்று சிறப்புப் பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் பணியில்லாதவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களுக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கும் பல அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டுமென தொழிற்சங்க உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே தெரிவித்தார்.

இவ்வாறு ஊழியர்களுக்கு உதவியாக வேலையில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50% விழுக்காடு அளவிற்கு 6 மாத காலத்திற்குச் ஊழியர்களுக்கு ஊதியமளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பணிக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு வேலை மற்றும் வேலையிழப்பு சம்பந்தப்பட்ட பல கோரிக்கைகளை இச்சிறப்பு பணிக்குழு எடுத்துரைத்துள்ளது.

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமியினால், அக்டோபரில் மட்டும் 169 பேர் உயிரிழப்பு!