சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரியைக் காரால் மோதிய சந்தேக நபர் கைது..!

Cop injured as man rams Volkswagen against police car, suspect arrested
Cop injured as man rams Volkswagen against police car, suspect arrested

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரி ஒருவரை காரால் மோதித் தள்ளியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு காவல்துறை அதிகாரிகள், கார் நிறுத்தும் இடத்தில் காரில் இருந்த ஒருவரை கேள்வி கேட்க முயன்றபோது, ​​அவர் திடீரென முன்னோக்கிச் சென்று, தனது காரின் வேகத்தை அதிகப்படுத்தி அதிகாரிகளை நோக்கி ஓட்டியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கனமழை காரணமாக கிரேக் ரோட்டில் திடீர் வெள்ளம்..!

அந்த நபர் தனது காரை வேகமாக இயக்கியதாகவும், காவல்துறை அதிகாரியை மோதியதும் அந்த நபர் சம்பவ இடத்தைவிட்டு காரில் விரைந்து சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்த சம்பவத்தில் அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புக்கிட் மேரா லேன் 3இல் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 12) மாலை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்ததாக காவத்துறை தெரிவித்துள்ளது.

கண்மூடித்தனமாக வாகனம் ஒட்டிய செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டதால், அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் எங்கே கைது செய்யப்பட்டார் என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg