சிங்கப்பூரில் 129 பணியிடங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவுகள் – மனிதவள அமைச்சகம் அதிரடி..!

Coronavirus: 129 stop-work orders issued to companies not implementing safe distancing at workplace
Coronavirus: 129 stop-work orders issued to companies not implementing safe distancing at workplace

சிங்கப்பூரில் பாதுகாப்பான இடைவெளியை அமைத்துத்தராத நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 தொற்று: சிங்கப்பூரில் ஐந்தாவது நபர் மரணம்..!

அதில் 129 வேலை நிறுத்த உத்தரவுகளும், 260 சரிசெய்வதற்கான உத்தரவுகளும் (Remedial Orders – RO), பணியிடங்களில் பாதுகாப்பான இடைவெளியை அமல்படுத்தும் முயற்சியில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சு (MOM) வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை, நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சேவையை மேம்படுத்த வேண்டி இருந்தது.

குறிப்பாக இந்த ஆய்வுகள் வீட்டிலிருந்து பணிகளைச் செயல்படுத்த இணங்குவதில் கவனம் செலுத்துகின்றன என்று MOM குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இந்த வேலை நிறுத்த உத்தரவை பெற்ற நிறுவனங்கள், தங்களுடைய தவறான செயல்முறைகளை சரிசெய்யும்வரை செயல்பட முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், RO உத்தரவைப் பெற்ற நிறுவனங்கள், தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இருப்பினும் தேவையான தீர்வுகளை அந்நிறுவங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: இந்தியாவில் உள்ள சிங்கப்பூரர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு..!