COVID-19: சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மொத்தம் 699 பேர் இந்தியாவில் இருந்து திரும்பினர்..!

Coronavirus: 699 Singapore citizens, residents evacuated from India
Coronavirus: 699 Singapore citizens, residents evacuated from India (Photo: VIVIAN BALAKRISHNAN/FaceBook)

கொரோனா வைரஸ் சூழலில், வெளியுறவு அமைச்சகத்தில் (MFA) பதிவுசெய்த, சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மொத்தம் 699 பேர், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக திரும்பினர்.

இது பற்றிய செய்திக்குறிப்பில், சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், நேற்று வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வீடு திரும்பினர் என்று MFA (ஏப்ரல் 11) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் சிங்கப்பூர் வந்த பயணிகள்..!

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது, இதன் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் புதுடெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய விமான நிலையங்களில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

புதுடெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், மும்பையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் ஆகியவை இந்தியாவில் இருந்து அவர்கள் நாடு திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

Over the past two days, we welcomed home 699 Singaporeans and residents who have been affected by the three-week…

Posted by Vivian Balakrishnan on Friday, April 10, 2020

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கு வசதியளித்த இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் திரும்பியவர்கள், 14 நாள் சுய-தனிமைப்படுத்தலுக்கு வழங்கப்பட்ட இட வசதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை நாங்கள் கவனித்துக் கொள்வோம் – பிரதமர் லீ..!