COVID-19: நார்த் பாயிண்ட் மாலில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வியாபாரம் இருந்தது..!

Coronavirus: Business as usual on Sunday at Northpoint, first major mall to be identified as a cluster
Coronavirus: Business as usual on Sunday at Northpoint, first major mall to be identified as a cluster

COVID-19 நோய் குழுவாக அடையாளம் காணப்பட்ட முதல் பெரிய மால்-ஆன நார்த்பாயிண்ட் சிட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) காலை வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது.

யிஷூனில் உள்ள ஷாப்பிங் சென்டரில் பெரும்பாலான உணவகங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் திறந்திருந்தன.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் ஏர்ஷோ மைதானம் தனிமைப்படுத்தப்படும் இடவசதியாக மாற்றம்..!

இந்தச் செய்திகளால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் நம்பிக்கை உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மால் உட்பட, சனிக்கிழமையன்று சுகாதார அமைச்சினால் (MOH) ஏழு புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில், நார்த்பாயிண்ட் சிட்டி மால் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திர மனிதர்களைக் கொண்டு மாலில் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 931 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!