COVID-19: சிங்கப்பூர் ஏர்ஷோ மைதானம் தனிமைப்படுத்தப்படும் இடவசதியாக மாற்றம்..!

Coronavirus: Singapore Airshow grounds converted to isolation facility
Coronavirus: Singapore Airshow grounds converted to isolation facility (Photo: Straits Times)

சிங்கப்பூர் ஏர்ஷோவின் இல்லமாக இருக்கும் சாங்கி கண்காட்சி மையத்தில் முதல் தொகுதியாக COVID-19 நோயாளிகள் (ஏப்ரல் 25) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லேசான அறிகுறிகளுடன் உள்ள சுமார் 50 நோயாளிகள் தற்போது சமூக தனிமைப்படுத்தும் மருத்துவ வசதியில் உள்ளனர், அவர்களுக்கு தேவையான உணவை ரோபோக்கள் வழங்குகின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 931 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இந்த இடவசதியின் உட்புற திறன் சுமார் 33,000 சதுர மீட்டர் ஆகும், இதில் சுமார் 2,700 நோயாளிகளை தங்க வைக்கலாம்.

இது பசீர் ரிஸில் (Pasir Ris) உள்ள D’Resort NTUC சமூக தனிமைப்படுத்தும் வசதியை விட ஐந்து மடங்கு அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் மேலும் விரிவாக்கம் செய்யும் திறன் உள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் கூடுதலாக 75,000 சதுர மீட்டர் வெளிப்புற இடவசதி உள்ளது, என்று நிர்வாகக் குழு வெள்ளிக்கிழமை தளத்தின் சுற்றுப்பயணத்தின் போது குறிப்பிட்டது.

நோயாளிகளின் வசிப்பிடங்களில் வைஃபை வசதி, மின் விசிறிகள், படுக்கைகள் மற்றும் சேமிப்பு பெட்டிகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவளை இல்லாமல் பால் அருந்திய வெளிநாட்டு ஊழியர்கள்; உடனடியாக 800 குவளைகள் மற்றும் தின்பண்டங்களை வழங்கிய IKEA..!