“அதிகரிக்கும் கொரோனா பரவல்… அடுத்த சில வாரங்கள் முக்கியமானவை”- சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

File Photo: Health Minister Ong Ye Kung

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது வரை சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 88%- க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

“சிங்கப்பூருக்கு பணிமாறுதல் பெற்று வந்த இந்திய தொழிலாளர்களின் விகிதம் கணிசமாக அதிகரிக்கவில்லை”- நாடாளுமன்றத்தில் மனிதவள அமைச்சர் விளக்கம்!

எனினும் ஒரு சிலர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, முதியவர்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டு வருவதாக தகவல் கூறுகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி முதியவர்கள் உயிரிழந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருந்தாலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், சிங்கப்பூரில் ஒரு சில இடங்களில் சமூக இடைவெளியை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் அடுத்து எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

‘The Online Citizen’ இணையத் தளத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கம்!

இந்நிலையில், ஆசியான்-ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார மாநாட்டில் காணொளி மூலம் கலந்துக் கொண்டு பேசிய சிங்கப்பூரின் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங், “சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த சில வாரங்கள் முக்கியமானவை; அதைப் பொறுத்துதான் நாட்டின் அடுத்தடுத்த திட்டங்களை நிர்ணயிக்க முடியும். கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்படுவதையும், உயிரிழப்பையும் தவிர்க்கத் தடுப்பூசி உதவுகிறதா என்று அதிகாரிகள் தற்போது கண்காணித்து வருகின்றனர். முகக்கவசம் அணிவது அனைவரும் செய்யக்கூடிய சுலபமான செயல்; அந்த விதிமுறை இப்போதைக்குத் தளர்த்தப்படாது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக, சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.