“சிங்கப்பூருக்கு பணிமாறுதல் பெற்று வந்த இந்திய தொழிலாளர்களின் விகிதம் கணிசமாக அதிகரிக்கவில்லை”- நாடாளுமன்றத்தில் மனிதவள அமைச்சர் விளக்கம்!

File Photo: Minister Tan See Leng

 

சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், வேலை வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு சம்மந்தப்பட்டத் துறைகளின் அமைச்சர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

‘The Online Citizen’ இணையத் தளத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கம்!

அந்த வகையில், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களில் எத்தனை சதவீதம் பேர் சிங்கப்பூருக்கு பணியிடமாற்றம் பெற்று, தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறித்து புள்ளி விவரங்களுடன் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

அப்போது அமைச்சர் கூறியதாவது, “பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களில், சிங்கப்பூருக்கு பணியிடம் மாறி வந்த விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து சிங்கப்பூருக்கு பணியிட மாறுதல் பெற்று வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 2016- ஆம் ஆண்டு 2,100 ஆகவும், கடந்த 2020- ஆம் ஆண்டு 4,200 ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூருக்கு பணிமாறுதல் பெற்று வந்த இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து பார்ப்போம், 2016- ஆம் ஆண்டு 300 தொழிலாளர்கள், 2019- ஆம் ஆண்டு 600 தொழிலாளர்கள், 2020- ஆம் ஆண்டு 500 தொழிலாளர்கள் சிங்கப்பூருக்கு பணி மாறுதல் பெற்று பணியாற்றி வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 13 சீரிஸ் போன்கள் அறிமுகம்: சிங்கப்பூரில் விலை என்ன?

வெளிநாட்டு நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பப் பிரிவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தப் போதும், அதே பிரிவில், உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கை அதைவிட மேலும் அதிகரித்துள்ளது. அந்தப் பிரிவில், உள்ளூர்வாசிகளின் வேலையின்மை விகிதமும் குறைவாக இருந்தது”. இவ்வாறு அமைச்சர் கூறினார்.