‘The Online Citizen’ இணையத் தளத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கம்!

FILE PHOTO

 

சிங்கப்பூரில் உள்ள தகவல் தொடர்பு மற்றும் ஊடக மேம்பாட்டு ஆணையம் நேற்று முன்தினம் (14/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “The Online Citizen (TOC) இணையத் தளத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (16/09/2021) பிற்பகல் 03.00 மணியில் இருந்து அது எந்த விதமான பதிவுகளையும், அதன் இணைய தளங்களிலோ, கணக்குகளிலோ சேர்க்க அனுமதிக்கப்படமாட்டாது. இந்த தற்காலிக முடக்கமானது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்.

“அமைதியான உலகை உருவாக்க சீனாவுடன் தொடர்ந்து பணியாற்றவிருக்கிறோம்”- பிரதமர் லீ சியன் லூங்!

‘TOC’ அதன் நிதி ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியது. சட்டத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கு அது சரியான விளக்கமும் கூறவில்லை. காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது; நினைவூட்டப்பட்டது. இதனால்தான் ‘TOC’ இணைய தளத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. ‘TOC’ போன்று, சிங்கப்பூர் அரசியல் சார்ந்துப் பதிவிடும் இணையத் தளங்கள், எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்பதை, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

பல நினைவூட்டல்களுக்கு பிறகும், காலக்கெடு நீட்டிப்புக்குப் பிறகும், ‘The Online Citizen’ இணைய தளம், அதன் நிதி ஆதரவு குறித்த முழுமையான தகவல்களை 2020- ன் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கத் தவறிவிட்டது. உரிய விளக்கமளிக்க ஆணையம் சார்பில் 13/09/2021 அன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டும், ‘TOC’ இணைய தளம், காரணத்தைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை”. இவ்வாறு ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 13 சீரிஸ் போன்கள் அறிமுகம்: சிங்கப்பூரில் விலை என்ன?

‘The Online Citizen’ சிங்கப்பூரில் பிரபல டிஜிட்டல் மீடியா நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் தனது இணைய தளம் மூலம் செய்திகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.