சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை ஏற்றம், இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. இருப்பினும், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன.

சர்வதேச பயணிகளுக்கு எல்லைகளை மீண்டும் திறக்க உள்ள மலேசியா

தற்போது சிங்கப்பூரில் 80%- க்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டிருந்தாலும் கூட, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல்; பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல்; கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது.

தற்போது சிங்கப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க வேண்டும் என கடிதம்

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் மேலும் 2,304 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 2,299 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமூக அளவில் 2,179 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 120 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,35,480 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து சிங்னல் இல்லாதபோது சாலையை கடந்த மூதாட்டி – நூலிழையில் தப்பிய காணொளி

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,574 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 253 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 123 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாளில் 2,539 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 389 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.