கொரோனா வைரஸ் தொற்று (COVID-19); 5 நாள் மருத்துவ விடுப்பு..!

கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்கும் முயற்சியாக, காய்ச்சல், இருமல், தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாச சம்பந்தபட்ட அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு ஐந்து நாட்கள் விடுப்பு அளிக்கச் சுகாதார அமைச்சகம் (MOH) அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூரில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களில் பலர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதையும், நோய்வாய்ப்பட்ட பிறகும் அவர்கள் வேலைக்குச் செல்வதையும் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சகம் (MOH), நடைமுறையில் உள்ள ஐந்து நாள் விடுப்பை மக்கள் மற்றும் முதலாளிகள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குப்பை தொட்டியில் கைவிடப்பட்ட குழந்தை; தாய் கைது..!

“சுவாச அறிகுறிகள் உள்ள பெரும்பாலான நோயாளிகள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நாம் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

மேலும், “சுவாச அறிகுறிகள் உள்ள எவரும் (காய்ச்சல், இருமல், தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை) ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது முக்கியம், அவர்களின் நோய் குணமடையும் வரை வீட்டில் இருக்க வேண்டும்” என்றும் MOH குறிப்பிட்டுள்ளது

கூடுதலாக, “உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது நோயாளிகள் வீட்டிலேயே இருப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும். பெரும் கூட்டங்களில் கலப்பது, அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது தொடர்ந்து வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்வது போன்றவை கூட மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஐந்து நாட்களுக்குள் குணமடையாதவர்கள் கூடுதலான மருத்துவ சோதனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். கூடுதலாக சிகிச்சையைப் பெறும்போது அதே மருத்துவரிடம் செல்லுமாறும் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதில் 900 பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் அடங்கிய கட்டமைப்பை மீண்டும் செயல்படுத்த MOH முடிவு செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் தனிப்பட்டவர்களின் உடல் நலனைப் பாதுகாக்க தேவையான சாதனங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சீனாவில் COVID-19 தொற்றுநோய் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

MOH நினைவூட்டல்

இந்த “கிருமி பரவும் இடங்களை முன்கூட்டியே கண்டுபிடித்து மேலும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்,” என்று MOH தெரிவித்துள்ளது.

ஆனால் பொதுமக்களும் தங்களுடைய பங்கை ஆற்றி, சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் பயனளிக்கும் என்று
MOH நினைவூட்டியுள்ளது.

கைகளைச் சுத்தமாகக் கழுவி வைத்திருப்பது, சோப்புகளை அல்லது தண்ணீர் இல்லாத சமயத்தில் கிருமி நாசினியைப் பயன்படுத்துவது, முகத்தை தேவையில்லாமல் தொடுவதைத் தவிர்ப்பது போன்றவற்றை பொதுமக்கள் பின்பற்றலாம் என்றும் தெரிவித்துள்ளது.