சிங்கப்பூரில் குப்பை தொட்டியில் கைவிடப்பட்ட குழந்தை; தாய் கைது..!

Mother charged with abandoning baby
Mother charged with abandoning baby in Bedok North rubbish chute

சிங்கப்பூரில் 26 வயதான பெண்மணி தனது பிறந்த ஆண் குழந்தையை, பெடோக் பிளாட் ஒன்றில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாக சனிக்கிழமை இன்று (பிப்ரவரி 15) குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பெடோக் வடக்கில் உள்ள ஒரு எச்டிபி தொகுதி குப்பைத் தொட்டியில், ஆண் குழந்தை ஒன்று கடந்த ஜனவரி 7 ஆம் தேதி உயிருடன் காணப்பட்டது. பிளாக் 534 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 3-ல், அன்று காலை 9.10 மணியளவில் உதவிக்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் குப்பை தொட்டியில் கண்டெடுப்பு..!

மேலும், துணை மருத்துவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். சீரான நிலையில் குழந்தை இருந்ததாகவும், குழந்தைக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் போலீசார் அச்சமயம் தெரிவித்தனர்.

தாய் கைது

பெடோக் போலீஸ் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகள் மூலமாகவும், போலீஸ் தரப்பு கேமராக்கள் மற்றும் அக்கம் பக்கத்திலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்களால் வழங்கப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடனும் குற்றவாளியை போலீசார் கண்டறிந்தனர்.

இந்நிலையில், அந்த பெண் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். குழந்தையின் தந்தையின் அடையாளத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மனநல கண்காணிப்புக்காக அந்த பெண்ணை, மனநல சுகாதார நிறுவனத்தில் (ஐ.எம்.எச்) ரிமாண்ட் செய்ய வழக்கறிஞர் விண்ணப்பித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், அவர் மனநல கண்காணிப்புக்காக இரண்டு வாரங்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார், பிப்ரவரி 28 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.

தண்டனை

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் இருக்கலாம்.

Source : CNA

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குப்பை தொட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை; தத்தெடுக்க பலர் விருப்பம்..!