சிங்கப்பூரில் NTUC FairPrice கிளைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடு…!

NTUC FairPrice outlets
FairPrice imposes purchase limits for paper products, rice and instant noodles amid coronavirus outbreak

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலையை ஆரஞ்சு நிலைக்கு உயர்த்தியதை அடுத்து, சிங்கப்பூர் மக்கள் பேரங்காடிகளில் உள்ள உணவுப்பொருட்களையும், மேலும் வீட்டுக்குத் தேவைப்படும் பொருட்களையும் அதிக அளவில் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அனைத்து என்டியுசி ஃபேர்பிரைஸ் விற்பனை நிலையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) முதல் ஒரு வாடிக்கையாளருக்கு நான்கு பேக் காகித பொருட்கள், இரண்டு மூட்டை அரிசி மற்றும் நான்கு பேக் உடனடி நூடுல்ஸை மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க : SARS நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தாண்டிய கொரோனா வைரஸ் உயிரிழப்புகள்…!

மேலும், 50 வெள்ளிகளுக்குள் மட்டுமே காய்கறிகள் வாங்கவும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்களை மட்டும் வாங்குமாறும், தேவைக்கு அதிகமாக இருப்புகள் இருப்பதாக என்டியுசி ஃபேர்பிரைசின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங் தெரிவித்துள்ளார்.

“தற்போது ஒன்பது மில்லியன் கழிவறைப் பயன்பாட்டு தாள்கள், 1.2 மில்லியன் உடனடி நூடுல்ஸ் பாக்கெட்டுகள், நான்கு மில்லியன் கிலோ அரிசி ஆகியவை இருப்பில் உள்ளன.”

மேலும், நாள்தோறும் கப்பலில் கூடுதல் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை ஓட்டுநர்கள் உட்பட 7 புதிய கொரோனா வைரஸ் சம்பவம்…!

ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர் முழுவதும் கடைகளில் வைக்கப்பட்ட ஒரு அறிவிப்பில், அதிக தேவை உள்ள பொருட்களை அனைத்து வாடிக்கையாளர்களும் வாங்குவதை உறுதி செய்வதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.