குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதியுதவி!

Photo: Little Singapore

 

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

எனினும், முதியவர்களில் சிலர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர், துணை பிரதமர், அதிபர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வேலியாக இருக்கும். முதியவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்பிருப்பதால், அவர்கள் முன்பதிவின்றி கொரோனா தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாம். வீட்டை விட்டு வெளியே வரமுடியாத முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசிப் போடப்பட்டு வருகிறது. எனவே, முதியவர்கள் காலதாமதன்றி தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

“வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு வரவழைப்பது சவால்மிக்கது”

கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டாலும் கூட, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு கொரோனா சுய பரிசோதனை கருவிகளும் இலவசமாக அரசு வழங்கி வருகிறது.

இதனிடையே, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் சார்ந்த சிறு நிறுவனங்களும், ஊழியர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஊழியர்கள் தங்களது குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை வாங்குவதற்கு கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளன.

இந்த நிலையில், “கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ‘The Courage Fund’ என்ற நிதியிலிருந்து, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது. அவர்கள் இரண்டு முறை 1,000 சிங்கப்பூர் டாலர் வரை உதவித்தொகை பெறுவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வருமானம் இழந்தாலோ, தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ உதவித்தொகை வழங்கப்படும்.ஒருமுறைக்கு மேல் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றியோருக்கும் அது பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பப்பவர்களின் மாதக் குடும்ப வருமானம் 6,200 சிங்கப்பூர் டாலருக்கு அதிகமாக இருக்கக் கூடாது. அதேபோல் தனிநபர் மாத வருமானம் 2,000 சிங்கப்பூர் டாலருக்குள் இருக்க வேண்டும்.

COVID-19: தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் ஏழு பேர்..

ஜூலை 13- ஆம் தேதி வரை, இந்த திட்டத்தின் கீழ் 2,300- க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளன. ஜூலை 13- ஆம் தேதி வரை ‘The Courage Fund’-க்கு கொரோனாவுக்கான நிதியாக 18.4 மில்லியன் சிங்கப்பூர் டாலர் நன்கொடை வந்துள்ளது. இதில் 2,500 பயனாளிகளுக்கும் மேலாக சுமார் 2.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர் வழங்கப்பட்டது.

இந்த நிதியைப் பெற தகுதியுள்ள குடும்பங்கள் இணையதளம் மூலம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தங்கள் விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்ய உதவித் தேவைப்படும் பொதுமக்கள் 1800-222-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். மேலும், Ask_SSO@msf.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

தனிமைப்படுத்துதல் உத்தரவு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள், அன்றைய தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பங்கள் செய்ய வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான தகவல்கள் அல்லது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் சம்மந்தப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்” என சமூகம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய சமூக சேவை கவுன்சில் (National Council of Social Service) நேற்று (01/08/2021) தெரிவித்தன.

சமூகம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Minister for Social and Family Development Masagos Zulkifli) கூறுகையில், “குறைந்த வருமானக் குடும்பத்தினரின் நிதி நிலைமை, கொரோனா வைரஸ் சூழலால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும்; உதவித்தொகை போன்ற ஆதரவு அவர்கள் விரைவாக மீண்டுவர உதவும்” எனத் தெரிவித்தார்.