“வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு வரவழைப்பது சவால்மிக்கது”

All foreigners can automated lanes singapore travel
Pic: Foreign workers Singapore risk

கொரோனா கிருமித்தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள உயர் கட்டுப்பாடுகளால் தொழிலாளர் சந்தை மேம்பாட்டுக்கு தடையாக விளங்கக்கூடும் என கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பணிப்பெண்களின் எண்ணிக்கை சேர்க்கப்படாமல், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 15,700ஆக குறைந்ததாக மனிதவள அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

இதற்கு முந்தைய காலாண்டில், நான்கு காலாண்டுகளாக குறைந்து வந்த வேலைகள் முதன்முதலாக வளர்ச்சி கண்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மனிதவள அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் அவ்பெக் காம் (Aubeck Kam) இரண்டாம் காலாண்டில் வேலையில் இருக்கும் குடியிருப்பாளர் எண்ணிக்கை மிதமான வளர்ச்சி கண்டது என்றார்.

போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது!

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் ஒப்பந்தப்படி பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதால் இந்த நிலை மாறியது என்றும், தற்பொழுது பொதுச் சுகாதார காரணங்களால் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு வரவழைப்பது சவால்மிக்கதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

வேலையின்மை விகிதம் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்த போதிலும், சென்ற மாதம் மேலும் குறைந்தது என அமைச்சகம் கூறியது. இதன் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தை எட்டிய வேலையின்மை விகிதம் அதன்பின் படிப்படியாக குறையத் தொடங்கியது என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

எடிடிஎக்ஸ் எனப்படும் மின்னிலக்க பங்குப் பரிவர்த்தனை நிறுவனத்தின் முதலீட்டுச் சந்தைப் பிரிவில் மூத்த துணைத் தலைவராக உள்ள சேமுவல் கான் கூறுகையில், சிங்கப்பூர் தனது தடுப்பூசி போடும் இலக்கை நோக்கி முன்னேறி வருவதால் அதைத்தொடர்ந்து கட்டுப்பாடுகளும் நாளடைவில் தளர்த்தப்டும் என்றும், இதனால் ஆண்டின் இரண்டாம் பாதியில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து கீழ்நோக்கிச் செல்லும் என்றும் கூறினார்.

உருமாறிய டெல்டா வகைக் கிருமித்தொற்று, அரசாங்க ஆதரவு நடவடிக்கைகள் முடிவுக்கு வருவது போன்றவை வேலைவாய்ப்பு சூழலில் இருக்கும் ஆபத்துகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் அதிகரித்து வரும் கிருமித்தொற்று பரவலை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போக்கில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சுமார் 315 சந்தேக நபர்களிடம் காவல்துறை விசாரணை…