சுமார் 315 சந்தேக நபர்களிடம் காவல்துறை விசாரணை…

scams Suspects investigated
Photo: Pickawood/Unsplash

சிங்கப்பூரில், சுமார் 315 பேர் மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் காவல்துறை விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.

அதில் 15 முதல் 74 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்குவர் எனவும் சிங்கப்பூர் காவல்துறை (SPF) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது!

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் S$8.1 மில்லியனுக்கும் அதிகமாக தொகையை இழந்துள்ளனர்.

கடந்த ஜூலை 17 முதல் 30 வரை, இரண்டு வார கால அதிரடி சோதனை நடவடிக்கையில் மொத்தம் 218 ஆண்களும் 97 பெண்களும் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் வர்த்தக விவகாரத் துறை மற்றும் ஏழு காவல் தரைப் பிரிவுகளின் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதில் முக்கியமான மோசடிகள்:

  • இணைய காதல் மோசடிகள்
  • இ-காமர்ஸ் மோசடிகள்
  • ஆள்மாறாட்டம் மோசடிகள்
  • முதலீட்டு மோசடிகள்
  • வேலைவாய்ப்பு மோசடிகள்
  • சூதாட்ட மோசடிகள்
  • கடன் மோசடிகள்

சந்தேக நபர்கள் 926க்கும் மேற்பட்ட மோசடிகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

ஜூரோங் வெஸ்ட்டில் சண்டையிட்டுக்கொண்ட 2 பெண்கள் கைது – (காணொளி)