சிங்கப்பூரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது சுகாதாரத்துறை அமைச்சகம்!

Photo: Google Maps

சிங்கப்பூரில் கொரோனா பரவல் மற்றும் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் போன்றவையை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத்துறை அமைச்சகம், அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் படிப்படியான தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய அப்டேட்

அந்த வகையில், நேற்று (08/11/2021) கொரோனா தடுப்பு பணிகளுக்கான அமைச்சர்கள் குழு வெளிநாட்டு பயணிகள், உள்நாட்டு மக்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கொரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டவர்களாக இருந்தால் ஐந்து பேர் வரை குழுவாக உணவகங்களில் ஒன்றாக உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 10- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சிங்கப்பூர்-மலேசியா இடையே தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான தனிமை இல்லா சிறப்பு பயணம்

இருப்பினும், முழுமையாக தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட, வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் குழுவாக உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி இல்லை. அதேபோல், உணவு மற்றும் பானம் விற்பனை கடைகளில் நவம்பர் 10- ஆம் தேதி முதல் மென்மையான பதிவு செய்யப்பட்ட இசையை பிளே செய்ய அனுமதிக்கப்படும். ஆனால், நேரடி இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடைச் செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் பானக் கடைகள், காப்பிக் கடைகளில் இரண்டு பேர் வரை குழுவாக அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.